சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று (09.10) கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய வர்த்தகரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் துபாயிலிருந்து இன்று அதிகாலை 4.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த நான்கு பயணப்பொதிகளிலிருந்து 152 கையடக்கத் தொலைபேசிகள், 05 டெப்கள், 38 விஸ்கி போத்தல்கள் மற்றும் 44 வெளிநாட்டு சிகரட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here