ஓகஸ்ட் 2 இரவு 10.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் சில கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடல் பிரதேசங்களில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் அந்த பகுதிகளில் மணிக்கு 55 முதல் 65 கிமீ வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் பணிகளில் ஈடுபடும் கடற்படையினர் மற்றும் மீனவ சமூகத்தினர் அவதானமாக இருக்குமாறும், வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் எதிர்கால வானிலை அறிக்கைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








