வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (நவம்பர் 11) மாலை 3 மணி முதல் அமுலுக்கு வந்துள்ளது.
மூன்று நாட்கள் விடுக்கப்பட்டுள்ள குறித்த எச்சரிக்கைக்கு அமைய, முதல் நாள் குறிப்பிட்ட கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரை இருக்கும் என்றும், அவ்வப்போது மணிக்கு 60 கி.மீ வரை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடல் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் நாள் நிலைமை மேலும் மோசமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வரை அதிகரித்து, அவ்வப்போது மணிக்கு 70 கி.மீ வரை வீசும். இதனால் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.
இதனால் கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மூன்றாம் நாளும் இதேபோன்ற கொந்தளிப்பான கடல் மற்றும் பலத்த காற்று தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







