கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள் குழு பதுளை பகுதியில் களப்பயணத்தில் ஈடுபட்டிருந்த போது இடம்பெற்ற கொடூர விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக, பல்கலைக்கழகத்தால் இழப்பீடு வழங்க முடியுமா என ஆராய்ந்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்த மாணவன் ஒருவரின் தந்தையால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை பரிசீலித்த பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

விபத்துக்கு உள்ளான மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பொறுப்பு குறித்தும், சம்பவம் தொடர்பாக முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்துமாறு கோரியும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது இழப்பீடு வழங்கும் சாத்தியம் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here