உனவட்டுன பகுதியில் நேற்று (10) இரவு நடத்தப்பட்ட பொலிஸ் சோதனையில் ‘ஐஸ்’ மற்றும் ‘குஷ்’ போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் குழுவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹபராதுவ பொலிஸ் பிரிவில் குறித்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
சோதனையின் போது, உனவட்டுனவை சேர்ந்த 41 வயதான சந்தேகநபரிடம் இருந்து 134 கிராம் 18 மில்லிகிராம் ‘ஐஸ்’ மற்றும் 125 கிராம் 19 மில்லிகிராம் ‘குஷ்’ ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர் ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.






