கடல் பகுதிகளில் பலத்த காற்றும் கடல் கொந்தளிப்பும் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60 கி.மீ.க்கும் அதிகமாக வீசக்கூடும். இதனால் குறித்த கடற்பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.
எனவே, அடுத்த அறிவிப்பு வரும் வரை குறித்த கடற்பகுதிகளுக்கு மீனவர்களும் கடற்படையினரும் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மட்டக்களப்பு, திருகோணமலை, காங்கேசன்துறை, மன்னார் ஊடாக கல்பிட்டி வரை மற்றும் காலி முதல் மாத்தறை வரையிலான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ. வரை அதிகரிக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, இந்த கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்பயணங்களில் ஈடுபடும் மீனவ மற்றும் கடற்படை சமூகத்தினர் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கடல் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதோடு, அந்த நேரங்களில் கடல் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக மாறும் வாய்ப்பு உள்ளது.
எனவே வளிமண்டலவியல் திணைக்களம் இது தொடர்பில் வெளியிடும் அடுத்தடுத்த அறிவிப்புகள் குறித்து கவனமாக இருக்குமாறு மீனவ மற்றும் கடற்படை சமூகத்தினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.







