இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2026 ஜூலை மாதத்தில் இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ நிதி கையிருப்பு 6.591 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
ஜூன் மாதத்தில் இந்த கையிருப்பு 6.458 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்ட நிலையில் அதனுடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் 133 மில்லியன் அமெரிக்க டொலர் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது சுமார் 2.1% அதிகரிப்பை குறிக்கிறது.
இதேவேளை, இலங்கையின் தங்க கையிருப்பிலும் இம்மாதம் சிறிய அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
மத்திய வங்கி தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் 191 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த தங்க கையிருப்பு, ஜூலை மாதத்தில் 192 மில்லியன் அமெரிக்க டொலராக அதாவது 1 மில்லியன் அமெரிக்க டொலரால் அதிகரித்துள்ளது.








