புதிதாக ஒழுங்கு செய்யப்பட்ட கடவுச்சீட்டுகள் இலங்கைக்கு வந்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.
கடவுச்சீட்டு பெறுவதற்கான தற்போதைய வரிசைகள் இந்த வாரத்திற்குள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்கவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.








