கண்டி மாவட்டம் ரம்புகேவெல பிரதேசத்தில் நேற்று (30) இரவு ஏற்பட்ட மின்சார தாக்குதல் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மின்சார ஹீட்டர் ஒன்றைத் தொட்டதன் காரணமாக இந்த துயர சம்பவம் ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் ரம்புகேவெல பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொக்காவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








