சபரகமுவ மாகாணத்திலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மிமீ க்கு மேல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மத்திய, சபரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இந்த பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு பிறகு சில இடங்களில் மழை/இடியுடன் மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேல், வடமேல் மற்றும் வட-மத்திய மாகாணங்களில் பல மழை தடவைகள் மழை பெய்யலாம்.
வட-மத்திய, சபரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கடும் மழை காரணமாக ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளை மூட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கை எடுக்குமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






