ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் உடல் பொரல்லையில் உள்ள ஒரு தனியார் மலர் சாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதனை அடுத்து ஊடகங்களிடம் பேசிய ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) முன் ஆஜராகுமாறு தனக்கு சமீபத்தில் விடுக்கப்பட்ட அறிவிப்பு குறித்தும் கருத்து தெரிவித்தார்.

ஆணைக்குழு முன் ஆஜராவீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு , ராஜபக்ஷ, “ஆம், நான் செல்வேன். நாம் சென்றே ஆக வேண்டும், இல்லையா?” என பதிலளித்தார்.

கபில சந்திரசேனவின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை 5 மணிக்கு பொரல்லை பொது மயானத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here