‘ஹஷிஷ்’ போதைப்பொருளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கிய இலங்கை பயணி ஒருவர், இன்று (10) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (PNB) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 24 வயதான குறித்த சந்தேக நபர், பேங்கொக்கிலிருந்து அதிகாலை சுமார் 12.30 மணியளவில் விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.

அவரது பயணப் பெட்டிகளை சோதனையிட்டபோது, ​​ஹஷிஷ் அடங்கிய 15 சொக்லேட் வடிவ பொட்டலங்களை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த சந்தேக நபர் பொட்டலங்களுக்குள் மறைத்து 4 கிலோகிராம் மற்றும் 778 கிராம் ஹஷிஷை கடத்தி வந்துள்ளமை தெரியவந்தது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் சுமார் 47.7 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here