2012ஆம் ஆண்டு உலகம் அழியப் போவதாக ஒரு செய்தி பரவ, மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் இருந்தனர். ஆனால், நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கவில்லை.
அதேபோல் தற்போது அபோகாலிப்ஸ் பற்றி விஞ்ஞானிகள் கவலையில் உள்ளனர்.
விண்வெளியில் செவ்வாய் மற்றும் வியாழனுக்கிடையில் சிறுகோள்கள் சுற்றி வருகின்றன. அவ்வப்போது இவற்றில் சில பூமிக்கு அருகிலும் வருகின்றன.
2029ஆம் ஆண்டு ஒரு சிறுகோள் வரப்போகிறது. அதற்கு பெயர் அபோபிஸ் (Apophis). இது கற்பனைக்கு அப்பாற்பட்ட கடவுள் என்று அர்த்தம் கொள்ளப்படுகிறது.
எப்பொழுதும் பூமிக்கு சவாலானதாக இது இருக்கும்.
பெரிய கப்பலையொத்த இந்த சிறுகோள், பூமியைத் தாக்குமேயானால், ஒரு நாடே அழிக்கப்படலாம். சமுத்திரத்தில் மோதினால் சுனாமி வரலாம். எங்கு மோதினாலும் மக்களுக்கு சுவாசிக்க முடியாத ஒரு நிலை ஏற்படும்.
கணிப்பின்படி, 2029 ஏப்ரல் 13 அன்று இது பூமிக்கு அருகில் 32ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் கடந்து செல்லும்.
எனவே இச் சிறுகோள், பூமியைத் தாக்கினால், அதனை விண்வெளியிலேயே எவ்வாறு வெடிக்கச் செய்யலாம் என்ற ஆய்வில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.








