சைபர் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஆறு சீனப் பிரஜைகள் உட்பட எட்டு நபர்களை காலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிடைத்த தகவலின் அடிப்படையில் காலி துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுகம பிரதேசத்தில் உள்ள தற்காலிக தங்குமிடமொன்றில் பொலிஸ் அதிகாரிகள் நேற்று (01) திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 24 மற்றும் 36 வயதுடையவர்கள், ஆறு சீன பிரஜைகள் அடங்குகின்றனர், எஞ்சிய இருவர் கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் பிரஜைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது, ​​சந்தேகநபர்களிடம் இருந்து 09 கணனிகள், 73 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பெருந்தொகையான சிம் அட்டைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here