முன்னணி இசைக்கலைஞர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் பூதவுடலுக்கான இறுதிக் கிரியைகள் இன்று (22) பொரல்லை பொது மயானத்தில் நடைபெறவுள்ளன.
அவரது பூதவுடல் தற்போது பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக நாவல, விஜயப்பாகு மாவத்தையில் உள்ள நந்தா மாலினி இசை ஆசிரமத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இறுதிச் சடங்குகள் தொடர்பான மேலதிக விவரங்களை பேராசிரியர் சுனில் ஆரியரத்ன வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய”காலை 10 மணிக்கு பான்சுகூல நிகழ்வுகள் நடைபெறும். அந்த நேரத்தில் சுமார் ஒரு மணி நேரம் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான வாய்ப்பு காணப்படாது. அதன்பின்னர் மீண்டும் மாலை 3:30 வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த சந்தர்ப்பம் வழங்கப்படும். மாலை 3:30 மணிக்கு பூதவுடல் ஊர்வலம் ராஜகிரிய, பாராளுமன்ற வீதி வழியாக பொரல்லை பொது மயானத்திற்கு செல்லும். அங்கு மாலை 5 மணிக்கு தகனக்கிரியைகள் நடைபெறும். அங்கு எந்தவித உத்தியோகபூர்வ நிகழ்வும் இடம்பெறாது.” என தெரிவித்துள்ளார்.







