கல்முனை, கெபித்திகொல்லேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் தாக்குதலினால் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்முனை பஸ் நிலையத்துக்கு பின்புறம் உள்ள வீதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருவள்ளுவர் மத்திய பகுதியை சேர்ந்த 68 வயதுடைய ஆணொருவரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கெபித்திகொல்லேவ பகுதியிலுள்ள மயானமொன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரும் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இவர் மஹரலபனாவ, கெபித்திகொல்லேவ பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் ஆவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here