அடுத்த வருடம் முதல் அனைத்து பரீட்சைகளும் தாமதமின்றி நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி பாடசாலை தவணை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் எவ்வாறாயினும், மூன்றாவது தவணை இரண்டு வாரங்களுக்கு நடத்தப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, ஜனவரி 20ஆம் திகதி, முதல் தவணை ஆரம்பமாகவுள்ளதாகவும், மாணவர்களுக்கான சீருடை மற்றும் பாடப்புத்தகம் என அனைத்தும் தயாராகிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here