ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு சார்பாக பன்னல –  எலபடகம பிரதேசத்தில் சட்டவிரோதமாக சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த  ஜனாதிபதி வேட்பாளரின் ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பன்னல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எலபடகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, பொலிஸ் அதிகாரிகள் சிலர் இரவு நேர சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு சார்பாக சட்டவிரோதமாக சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த ஆதரவாளர்கள் இருவரை கைது செய்ய முயன்றுள்ளனர்.

இதன்போது, இந்த ஆதரவாளர்கள் இருவரும் தங்களிடம் இருந்த பசையை  பொலிஸ் அதிகாரிகள் மீது கொட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது பொலிஸ் அதிகாரிகள் அனைவரும் அவர்களை துரத்திச் சென்று பிடித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here