பொலிஸாரினால்  முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போது, கழிவு கால்வாயில் பாய்ந்து தப்பிக்க முயன்ற 45 வயதான பெண்ணொருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் அவரிடம் இருந்து 5 லட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதி வாய்ந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அன்னமலே செல்வராணி  என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த பெண்ணின் மட்டக்குளி கதிரானவத்தை பகுதியிலுள்ள வீடு  பொலிஸாரினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற பெண் அருகிலுள்ள கழிவு கால்வாயில் பாய்ந்துள்ளார்.

 இதனையடுத்து, அவரை மீட்பதற்காக மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன் கடும் முயற்சியின் பின்னரே  குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here