காதலை உறுதிப்படுத்தி கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகை கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகர்களில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் கீர்த்தி சுரேஷிற்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

இதனை தொடர்ந்து விஜய், சூர்யா, விஷால் என கோலிவுட் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்து விட்டார். தற்போது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, தமிழ் பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.

தேசிய விருது வாங்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தனக்குள் இருக்கும் மொத்த காதலையும் சினிமாவில் காட்டி நடித்து வருகிறார்.

15 வருட காதலை உறுதிச் செய்த புகைப்படம்

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து பல தகவல்கள் வெளியாகிய வேளையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் டுவிட்டர் பக்கத்தில் புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது, எதிர்வரும் டிசம்பர் மாதம் கீர்த்தி சுரேஷ்- ஆண்டனி இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், இவர்கள் இருவரும் கடந்த 15 வருடங்களாக காதலித்து வருவதாகவும் தகவல் வெளியாகியது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், 15 வருடங்களாக தொடர்கிறது என்றும் வருங்கால கணவருடன் அவருடைய பெயரையும் சேர்த்து போட்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here