யாழ்.தென்மராட்சி, மீசாலை வடக்கு, வேம்பிராய் – கான்றைச்சாட்டி அலாக்கிரக பூதவரத விநாயகர் ஆலயத்தின் தேர் திருவிழா நேற்று (18/04/2025) சிறப்பாக நடைபெற்றது.
தான்தோன்றி விநாயகனாகத் திகழும் கான்றைச்சாட்டி அலாக்கிரக பூதவரத விநாயகருக்கு 10 தினங்கள் வருடாந்த மகோற்சவம் இடம்பெறுகிறது.


நேற்று 9 ஆம் திருவிழா தேர்த் திருவிழாவாகும். இன்றைய தினம் தீர்த்தத் திருவிழா இடம்பெறும்.


[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]








