காலை நேரத்தில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் குடிப்பது நல்லது தான். ஆனால் அதை வெறும் வயிற்றில் குடிககலாமா? குடிக்கக் கூடாதா என்பது தான் இங்கு பிரச்சினை. காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிக்கும் போது சில பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

அசிடிட்டி பிரச்சினை

காலையில் வெறும் வயிற்றில வெந்நீர் குடிக்கும் போது வயிற்றுப் பகுதியில் ஏற்கனவே அமிலத் தன்மை அதிகமாக இருக்கும்.

குறிப்பாக இரவில் உற்பத்தியாகும் பித்தம் முழுவதும் வயிற்றுப் பகுதியில் இருக்கும். அதிலேயே வெந்நீர் குடிக்கும் போது இந்த அமிலங்கள் உணவுக் குழாய்க்கு மீண்டும் தள்ளப்படும்.

இதனால் அசிடிட்டி, (ஆசிட் ரிஃப்ளக்ஸ் – acid reflux) பிரச்சினை உண்டாகும். இந்த தவறைத் தொடர்ச்சியாகச் செய்யும்போது நெஞசெரிச்சல், வயிற்று வலி, மார்பில் அழுத்தம் போன்ற பிரச்சினைகளையும் ஏற்படு்த்தும்.

பல் எனாமல் பாதிப்பு

தொடர்ச்சியாக மாதக்கணக்கில் வெறுமு் வயிற்றில் வெந்நீர் குடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் அது உங்களுடைய பற்களை நிச்சயம் பாதிக்கும்.

பற்களின் மேல் பகுதியில் உள்ள னாமல் தேய்வதோடு கால்சியத்தால் ஆன பற்கள் அரிக்க ஆரம்பித்து விடும்.

வெந்நீரில் உள்ள ஒருவகை அமிலத் தன்மை ஏற்கனவே சென்சிடிவ் பற்களாக இருப்பவர்களுக்கு இந்த பாதிப்பை அதிகரிக்கச் செய்யக்கூடும்.

டயேரியா

இது உங்களுக்கு கேட்க வியப்பாக இருக்கலாம. சிலருக்கு காலையில் எழுந்ததும் ஏதாவது சூடாகக் குடித்தால் தான் காலைக்டனை கழிக்கவே முடியும் என்கிற நிலை உள்ளவர்களைப் பார்த்திருப்போம்.

அதாவது தொடர்ச்சியாக இப்படி வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்து வருமம்போது உங்களுடைய ஜீரண மண்டல ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

உங்களுக்கு ஏற்கனவே அஜீரணக் கோளாறுகள், மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கும்போது அதிக சூட்டுடன் நீரை குடிப்பதால் அது வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ஆபத்தும் உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here