யாழ்ப்பாணம், சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கத்தானைப்பகுதியில் 42 பவுண் தங்க நகைகள் தவறுதலாக குப்பையோடு குப்பையாக போடப்பட்ட சம்பவம் தொடர்பில்   பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

போத்தல் ஒன்றினுள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 42 பவுண் தங்க நகைகள் தவறுதலாக குப்பையோடு குப்பையாக கழிவு வைக்கப்படும் இடத்தில் வைக்கப்பட்டு, பின்னர் அது கழிவகற்றும் வாகனம் ஊடாக சாவகச்சேரியில் உள்ள குப்பை மேட்டினை வந்தடைந்துள்ளது.

இந்நிலையில், தமது நகைகள் தவறுதலாக குப்பையோடு போடப்பட்டதனை உணர்ந்த உரிமையாளர்கள் இது தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இது தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸார் சம்பந்தப்பட்ட தரப்பினரை அழைத்து விசாரணை நடத்திய போதிலும் இதுவரை காணாமல் போன நகைகள் தொடர்பாக எந்த விதமான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here