வவுனியா வைத்தியசாலை  விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி தாயொருவர் குளியலறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்ததுடன், அவரது வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதவாச்சி பகுதியை சேர்ந்த நிறைமாத கர்பிணித்தாய் ஒருவர் வவுனியா வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவது விடுதியில் உள்ள குளியலறைக்கு அவர் சென்ற நிலையில் தவறி வீழ்ந்ததாகவும், இதனால் அவர் உயிரிழந்ததாகவும் தெரியவருகின்றது.

இதனையடுத்து அவர் மீட்கப்பட்டு அவரது வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்றுவதற்காக வைத்தியர்கள் சத்திரசிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here