பொலிஸ் காவலில் இருந்தபோது சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஹோமாகம பொலிஸ் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி இன்று (29) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
மேல் மாகாண தெற்கு பிரிவு குற்றப் பிரிவு அதிகாரிகளால் சந்தேக நபர் நேற்று (28) மாலை கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 32 வயதுடைய பெல்லப்பிட்டிய, ஹொரணை பகுதியைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 26 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூன்று அதிகாரிகளின் சேவை இடைநிறுத்தப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேல் மாகாண தெற்கு பிரிவு குற்றப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வரும் விசாரணை தொடர்பாக நேற்று மாலை பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.







