பதுளை மஹியங்கணை வீதியின் அம்பகஹஒய பகுதியில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பேருந்து விபத்தில் உயிரிழந்த 2 மாணவர்களினதும் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன.

இந்தநிலையில், உயிரிழந்த 2 மாணவர்களினதும் இறுதி கிரியைகள் தொடர்பான செலவுகள் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை  மஹியங்கணை வீதியின் அம்பகஹஒய பகுதியில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சூரியவௌ பகுதியில் உள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தில் உள்ள மாணவர்கள் சென்ற பேருந்து நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது.

பிரேக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே, குறித்த பேருந்து விபத்துக்குள்ளானதாகப் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியிருந்தது.

இந்த விபத்தில் 39 பேர் காயமடைந்துள்ள நிலையில் 6 பேர் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here