ஈஸ்டர் தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், தன்னை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைக்கும் நடவடிக்கைக்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை, ஓகஸ்ட் 3 ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
குறித்த மனு இன்று (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரர் கோட்டாபய ராஜபக்ச சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரோமேஷ் டி சில்வா பதில் வாதங்களை முன்வைத்தார்.
அதன் பின்னர், மேலதிக வாதங்களை சமர்ப்பிப்பதற்காக மனுவை ஓகஸ்ட் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.








