கோட் படத்தில் குட்டி ஜீவனாக நடித்த குழந்தை நட்சத்திரம் அகிலன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோட் படத்துக்காக வெளிநாட்டுக்கு சென்ற காட்சிகளையும், நடிகை சினேகாவுடன் ஷாப்பிங் செய்த காட்சிகளையும் வீடியோக்களாக வெளியிட்டுள்ளார்.

கோட் படத்தில் விஜய் மற்றும் சினேகாவுக்கு மகனாக நடித்த அகிலன் எனும் குழந்தை நட்சத்திரம் வேறு யாருமில்லை ரவுடி பேபி எனும் யூடியூப் சேனல் மூலம் டிரெண்டாகி வரும் குழந்தை நட்சத்திரம் ஆழியாவோட தம்பி தான்.

ஆழியாவின் அலப்பறை வீடியோக்கள் யூடியூப் சேனலில் டிரெண்டாகி வரும் நிலையில், இரு குழந்தைகளுமே சினிமாவில் தொடர்ந்து நடித்து கலக்கி வருகின்றனர்.

விஜய் மற்றும் சினேகா உள்ளிட்டோருடன் கோட் படத்தில் நடித்தது ரொம்பவே சந்தோஷம் என்றும் அகிலன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

யோகி பாபு, வாணி போஜன் நடிப்பில் வெளியான சட்னி சாம்பார் வெப்சீரிஸிலும் சமீபத்தில் அகிலன் நடித்திருந்தார்.

தனது அக்கா ஆலியாவுடன் நடித்த யூடியூப் வீடியோக்களால் பிரபலமான இவருக்கு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here