பொலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

அதனையொட்டி அவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்து வருகிறார்கள்.

பொலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வந்த தீபிகா படுகோனே அவரையே சில வருடங்களுக்கு முன்பு திருமணமும் செய்துகொண்டுள்ளார்.

அவர்களது திருமண வாழ்க்கை காதலோடும், அமைதியோடும் நகர்ந்துகொண்டிருப்பதுடன், திருமணத்திற்கு பிறகு தீபிகா நடிப்பதற்கு ரன்வீர் எந்தவிதமான தடையையும் போடவில்லை.

மேலும் இவ்வாறான சூழலில் இப்படி இருக்க தீபிகா படுகோனே கர்ப்பமடைந்தார். அதுதொடர்பான ஃபோட்டோஷூட்டும் சமீபத்தில் ட்ரெண்டானது.

இந்நிலையில் தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனால் அவர்களது குடும்பம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறது. மேலும் தீபிகாவுக்கும், ரன்வீருக்கும் பலரும் தங்களது வாழ்த்தினை சொல்லி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here