வத்தளை பிரதேசத்தில் உள்ள செல்லப் பிராணிகளை விற்பனை செய்யும் நிலையமொன்றில் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட நான்கு வெளிநாட்டு மலைப்பாம்புகளுடன் மூன்று சந்தேக நபர்கள் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செல்லப் பிராணிகளை விற்பனை செய்யும் நிலையத்தின் உரிமையாளரும், இரண்டு பணியாளர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்த இரண்டு ஆண் மலைப்பாம்புகளும் இரண்டு பெண் மலைப்பாம்புகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பல இலட்சம் ரூபா பெறுமதியான இந்த மலைப்பாம்புகள் பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டு வெளிநாட்டிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கலாம் எனவும்  பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதனையடுத்து, இந்த மலைப்பாம்புகள் அனைத்தும் தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here