பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “பியுமா” என்று அழைக்கப்படும் பியூமி ஹஸ்திக என்பவரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது.

மேலும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கோரிக்கைக்கு இணங்க, “பியுமா”விற்கு சொந்தமான அனைத்து வங்கி கணக்குகளையும் சோதனையிட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இவர் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன்  கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.

இதனையடுத்து, இவரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் உத்தரவு விட்டிருந்தது.

இவர் “குடு சலிந்து” என்று அழைக்கப்படும் சலிந்து மல்ஷிக என்ற பிரபல போதைப்பொருள் கடத்தற்காரரின் உதவியாளர் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here