களுத்துறை  பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உக்கல்பட மற்றும் வஸ்கடுவ ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்புக்களின் போது சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் பெண் உட்பட இருவர் நேற்று வெள்ளிக்கிழமை (17/1/2025) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை பொலிஸ்  குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்புக்களின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை, வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய நபரும் களுத்துறை வடக்கு பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதுடைய பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 3,100 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here