சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (11/04/2025) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய வர்த்தகர் ஆவார்.

சந்தேக நபரான வர்த்தகர் துபாயிலிருந்து இன்றைய தினம் அதிகாலை 05.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதிகளிலிருந்து 15,000 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 75 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here