யாழ். மாவட்ட குடிசார் அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் (27/02/2025) வியாழக்கிழமை பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் ஊராட்சி முற்றம் (மகளிர் குரல்) என்ற சமூக மட்டப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
யாழ் மாவட்ட குடிசார் அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவி திருமதி ம.தமிழ்ச்செல்வி தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரீமோகனன், வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் பொ.வாகீசன், கிறிசலிஸ் நிறுவனத்தின் திட்ட மற்றும் பிராந்திய முகாமையாளர் ம.பிரபாகரன், உதவி மாவட்ட செயலாளர் தர்ஷினி, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி சுதோகுமார் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்திருந்தனர்.


இதன்போது சமுகத்தில் தீர்க்கப்படப்படாத பிரச்சனைகளாக உள்ள வேலணைப் பிரதேச வைத்தியசாலையின் ஆளணிப் பிரச்சனை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், நீதிமன்ற வழக்குப் பதிவின் போதான தாமதமும், அதனால் பெண்கள் எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சனைகளும், நுகர்வோர் பாதுகாப்பு, பொதுச் சுகாதாரம், போக்குவரத்து, விவசாயம் மற்றும் வடிகாலமைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக ஆராயப்பட்டிருந்தது.

[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]








