ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் தொலைபேசி உரையாடல் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
“பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை” குறித்துப் பேசும் நோக்கில் இந்த உரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளது.
ஈரானும் அமெரிக்காவும் பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
எனினும் ஹார்முஸ் நீரிணை தொடர்பான அமெரிக்க-ஈரான் மோதல் இன்னும் தீவிரமாக உள்ளது.
தற்பொழுது ட்ரம்ப் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதாக எச்சரித்துள்ள நிலையில், ஈரான் அமெரிக்காவின் ஹார்முஸ் நீரிணை முற்றுகையைக் குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில் மோதலை முடிவுக்கு கொண்டுவரும் விடயத்தில் பாகிஸ்தான் முனைப்பு காட்டி வருகிறது.
உலகலாவிய ரீதியில் சுமார் 5 இல் ஒரு பங்கு எண்ணெய் போக்குவரத்து மேற்கொள்ளப்படும் ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண நிலை எண்ணெய் வர்த்தகத்தை முடக்கியுள்ளது. இதன் காரணமாக உலகளாவிய ரீதியில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது.








