சர்வதேச யானைகள் தினமான இன்று கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயத்தில் யானைகளை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

பாடசாலையின் முதல்வர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் எஸ்-சிவசங்கர் அவர்களும் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் M.சசிகரன், சுற்றுச்சூழல் அதிகார சபையின் உத்தியோகத்தர் எஸ் -லதீஸ்குமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார்,ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என பலரும்  கலந்து கொண்டனர்.

பாடசாலையின் அனைத்து வகுப்பு மாணவர்களும் யானைபோல் வேடம் அணிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

உலக யானை தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here