சாலையோரக் கடையொன்றில் பெண் ஒருவரிடமிருந்து சங்கிலியை பறித்துவிட்டு தனது சகாவுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்லும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
குறித்த காட்சிகளின்படி, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் கடைக்கு அருகில் நிற்பதைக் காண முடிகிறது, அதன் பின் அவர்களில் ஒருவர் பெண் கடை உரிமையாளரை அணுகுகிறார்.
சந்தேக நபர் கடை உரிமையாளரிடம் பொருள் கேட்பதையும், மற்றொரு பெண் வாடிக்கையாளர் அங்கு இருப்பதையும் காண முடிகிறது.
சில நொடிகளுக்குப் பிறகு, அந்த நபர் திடீரென வாடிக்கையாளராக இருந்த பெண் அணிந்திருந்த சங்கிலியை பறித்துக்கொண்டு தனது சகா காத்திருக்கும் மோட்டார் சைக்கிளை நோக்கி செல்கிறார்.
அதன்பின்னர் இரண்டு சந்தேக நபர்களும் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்வதைக் காண முடிகிறது.







