வரக்காபொல பகுதியில் தனது செல்லப் பூனையை காப்பாற்ற முயன்றபோது தவறுதலாக கிணற்றில் விழுந்து 32 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வரக்காபொல, அல்கம, மதுருப்பிட்டியைச் சேர்ந்தவர்.

அக்டோபர் 20 ஆம் திகதி இரவு 10 மணியளவில், வீட்டின் பின்புறம் பூனைகள் அழும் சத்தம் கேட்டு, அவற்றில் ஒன்று கிணற்றில் விழுந்ததை அவர் கண்டுபிடித்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் தனது தந்தையுடன் கிணற்றுக்குச் சென்று, சிக்கிய பூனையைக் கண்டுபிடிக்க தனது கையடக்கத் தொலைபேசியில் உள்ள டோர்ச் (கையடக்க மின்விளக்கு) வெளிச்சத்தைப் பயன்படுத்தியுள்ளார்.

கயிற்றில் கட்டப்பட்ட வாளியைப் பயன்படுத்தி அந்த பூனையை மீட்க அவரது தந்தை தயாராகிக் கொண்டிருந்தபோது, வெளிச்சம் கொடுப்பதற்காக சென்ற நிலையில் தவறுதலாக கிணற்றில் விழுந்ததாகவும், விழும் போது தலை கொங்கிரீட் பகுதியில் மோதியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் அவர் உறவினர் ஒருவரின் உதவியுடன் மீட்கப்பட்டு நிட்டம்புவ, வத்துப்பிட்டிவல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அங்கு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

குறித்த பெண் நிட்டம்புவ, கலகெதிஹேனவில் உள்ள கையுறை உற்பத்தி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்ததுடன், தனது பெற்றோர் மற்றும் தம்பியுடன் வசித்து வந்துள்ளார்.

வரக்காபொல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here