சினிமா உலகில் ஒரே சிரிப்பால் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ரோபோ சங்கர்.

மேடை நிகழ்ச்சிகளில் இருந்து silver screen-க்கு வர, தன்னுடைய தனி ஸ்டைலில் ஹீரோக்களையும் மிஞ்சிய கைதட்டல்களைவாங்கியவர்.

தமிழ் திரைப்பட உலகை அதிர்ச்சிகுள்ளாகியுள்ளது இவரதுமரணம்.

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில வருடங்களாகவேசிகிச்சை எடுத்து வந்த ரோபோ சங்கர் உடல் மெலிந்துகாணப்பட்டார்.

பின்னர் மீண்டும் உடல்நலம் தேறி டிவி நிகழ்ச்சிகள்,திரைப்படவிழாக்களுக்கு பழைய உற்சாகத்தோடு வந்த ரோபோசங்கர்.பிஸியாக படங்களிலும் நடிக்க தொடங்கினார்.

நேற்று முன்தினம் படப்பிடிப்பில் பங்கேற்ற ரோபோ சங்கர்மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நீர்சத்து குறைபாடு காரணமாகதீவிர சிகிச்சை பிரிவில்அனுமதிக்கப்பட்ட ரோபோ சங்கர் நேற்று இரவு 8.30மணியளவில் காலமானார்.

நடிகராக பல வெற்றி படங்கள் ரோபோ சங்கர் கொடுத்திருந்தாலும் கூட ரோபோ சங்கரின் ஆரம்ப காலம் என்பது டிவி நிகழ்ச்சி என்றே பலர் அறிந்திருக்க கூடும் ஆனால் ரோபோ சங்கரின்

தொடக்கம் என்பது சென்னையிலிருந்துஆரம்பித்திருக்கிறது.

ரோபோ சங்கரின் வாழ்வில் “ஆணழகன் போட்டி” ஒரு முக்கியதிருப்புமுனையான ஒன்று.

இளமைக் காலத்தில் மதுரையில் நடைபெற்ற ஆணழகன்போட்டிகளில் பங்கேற்று “மிஸ்டர் மதுரை”, “மிஸ்டர் தமிழ்நாடு”ஆகிய பட்டங்களை வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

அந்த உடல் வலிமையும் கட்டுமஸ்தான தோற்றமே,பின்னாளில் அவருக்குத் ‘ரோபோ’ சங்கர் என்ற பிரபலமானபெயரை ஏற்படுத்தித் தந்தது.

தொடங்கிய இடத்திலிருந்தேகடந்த 2023 ஆம் ஆண்டு  25ஆண்டுகள் கழித்து மதுரையில் நடைபெற்ற 37வது ஆண்டுஆணழகன் போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தனதுபழைய வலிமையை நினைவூட்டும் வகையில் உடல்பாவனைகளைச் செய்துகாட்டினார்.

அதனை தொடர்ந்து தான் தனியார் தொலைக்காட்சி காமெடிநிகழ்ச்சிகளில் மிமிக்ரி கலைஞராக துவங்கிய அவர், தனதுஅசத்தலான முகபாவனைகள், குரல் கலாட்டாக்கள் மூலம் பிரபலமடைந்தார்.

“சிலர் சினிமாவில் வந்து கதாநாயகன் ஆகிறார்கள். சிலர் மட்டும்சிரிப்பால் பேரரசை உருவாக்குகிறார்கள். அந்த பேரரசை கட்டியகலைஞர் தான் ரோபோ ஷங்கர்.”

இளமை காலங்களில் ஆணழகனாகத் திகழ்ந்து, பின்னர்நகைச்சுவை நடிகராக ஆயிரக்கணக்கான ரசிகர்களை சிரிக்கவைத்த ரோபோ சங்கரின் மறைவு, தமிழ் சினிமா கலைஞர்களுக்குமட்டுமல்ல மட்டுமல்ல, ரசிகர்களின் மனங்களுக்கும் மிகப்பெரியஇழப்பாகும்.

மரணத்துக்குப் பின்னர் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் முதல் பல அரசியல்வாதிகள் பிரபல நடிகர்கள் கமல்ஹாசன் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here