நாட்டில் சீனி உற்பத்தியினை அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெல்வத்த மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தொழிற்சாலைகள் மூலம், உற்பத்தி செய்யப்படும் சீனியை முறையாக விநியோகிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகக் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here