சுற்றுலா விசாவின் மூலம் இலங்கைக்குள் உள்நுழைந்து பல்வேறுப்பட்ட நடவடிக்கையில் ஈடுபட்ட 15 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வழங்கப்பட்ட சுற்றுலா விசாவின் மூலம் வருகை தந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தில் சிற்ப தொழில் மற்றும் நோய்களை குணப்படுத்துவதாகக் கூறி மதப்பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மதப்பிரசாரங்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் கடந்த 8 ஆம் திகதி நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் சிற்ப தொழிலில் ஈடுபட்டிருந்த 8 இந்தியர்களும், விருந்தகத்தில் பணிப்புரிந்த ஐவரும் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் வழியாக நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here