ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவின் பிரகாரம் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, துறைமுக நகரம், மத்திய வங்கி, பாராளுமன்றம் உள்ளிட்ட கொழும்பை சுற்றியுள்ள கல்வியுடன் முக்கிய தொடர்புள்ள விசேட இடங்களை பார்வையிடும் வாய்ப்பு பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கமைய மெனிக்திவெல மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் சுமார் 570 மாணவர்கள் நேற்று (05.08) களப்பயணத்தில் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டதோடு ஜனாதிபதியை சந்திக்கும் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
மேலும் ஸ்மார்ட் வகுப்பறையொன்றை தமது பாடசாலைக்கு வழங்குமாறும், விளையாட்டு மைதானத்தை நவீனமயப்படுத்துமாறும் மாணவர்கள் விடுத்த கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அதற்கான பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இராணுவத்தினரின் பங்களிப்புடன் கல்லூரியின் மைதானத்தை நவீனமயப்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
மற்றும் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் கல்விசாரா செயற்பாடுகளை மேம்படுத்துவற்கு எடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.







