திருகோணமலை முத்து நகர் விவசாயிகள், தங்களது காணி பிரச்சினைக்கு தீர்வு கோரி, ஜன அரகலய இயக்கத்துடன் இணைந்து இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பதற்றமான சூழல் உருவானது. இதனால், செயலகத்தின் ஒரு நுழைவாயில் தற்காலிகமாக மூடப்பட்டது.
நிலையை கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு அதிரடிப் படையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.








