மேற்கு ஜேர்மனியின் சோலிங்கன் (Solingen) நகரில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர் மற்றும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அந்நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் நகர மையத்தில் நடைபெற்ற ஒரு விழாவின்போது, இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத ஒரு நபர் பல நபர்களைத் தாக்கினார், மேலும் குற்றவாளி இன்னும் தலைமறைவாக உள்ளதாக நகர பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இன்னும் எவரும் கைது செய்யப்படவில்லை, தலைமறைவாகியுள்ள சந்தேக நபரை தேடுவதற்காக ஹெலிகொப்டர் உட்பட ஒருபெரிய குழுவைஅனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலின் நோக்கம் மற்றும் சந்தேக நபரின் அடையாள விபரங்கள் இன்னும் தெரிய வரவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here