Sunday, November 8, 2026
No menu items!

ஜேர்மனி

மன அழுத்தத்திற்கு உள்ளாகிய ChatGPT!

மனிதர்களைப் போல சட்ஜிபிடி (ChatGPT) செயலியும் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜேர்மனி,சுவிட்சர்லாந்து,அமெரிக்கா,இஸ்ரேல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வுக் குழு நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. பயனர்களின் பல்வேறு விதமான கேள்விகள் பதற்றம் மற்றும் அழுத்தத்திற்கு உள்ளாக்குவதாகத் தெரியவந்துள்ளது.  

5 சதவீதமான ஊழியர்களை பணி நீக்கம் செய்த மெட்டா!

மெட்டா நிறுவனம் மீண்டும் பெரிய அளவில் பணி நீக்கம் செய்யத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி மார்க் சக்கர்பர்க் தலைமையிலான அந்நிறுவனம் அடுத்த வாரம் 3,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நிறுவனம் சமீபத்தில் குறைந்த செயல்திறன் கொண்டவர்களில் 5 சதவீதமான ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. இது தொடர்பில் வெளியான...

நாட்டிற்கு வருகை தரும் அதிகளவான இந்திய சுற்றுலாப் பயணிகள்…!

இந்த மாதத்தின் கடந்த 5 நாட்களில் மாத்திரம் 30, 620 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளனர். இந்தியாவிலிருந்து 7,785 பேரும், ரஷ்யாவில் இருந்து 4,488 பேரும், ஜேர்மனியிலிருந்து 2,752 பேரும் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த...

95 வது இடத்தை பிடித்த இலங்கை!

அக்டோபர் 2024 இல் வெளியிடப்பட்ட சமீபத்திய ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின்படி, சிங்கப்பூர் மீண்டும் உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது, அதன் குடிமக்களுக்கு 195 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை வழங்குகிறது. பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகியவை இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டன, சமீபத்திய தரவரிசையின்படி 192 நாடுகளுக்கு விசா...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குச் சொந்தமான வாகனம் இங்கிலாந்தில் திருடப்பட்டுள்ளதாக தகவல்!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குச் சொந்தமான சட்டவிரோதமான முறையில் இணைக்கப்பட்ட வாகனம் இங்கிலாந்தில் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் DIG நிஹால் தல்துவா, INTERPOL இணையத்தளத்தின்படி, இந்த வாகனம் ஜேர்மனியில் தயாரிக்கப்பட்டு இங்கிலாந்தில் வாங்குபவர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். INTERPOL இணையதளத்தில் வழங்கப்பட்ட விவரங்களின்...

அதிகரிக்கும் சுற்றுலாப்பயணிகளின் வருகை…!

இந்த மாதத்தின் கடந்த 9 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 36,877 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியாவிலிருந்து 10,857 பேரும் சீனாவிலிருந்து 3,105 பேரும், ஜேர்மனியிலிருந்து 2,425 பேரும் நாட்டுக்கு பிரவேசித்துள்ளனர். அதேநேரம், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 15 இலட்சத்து 21 ஆயிரத்து 685 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளனர்.

ஜேர்மனியின் முக்கிய அறிவிப்பு..!

சட்டவிரோத குடியேற்றங்களைத் தடுப்பதற்கு அண்டை நாடுகளுடனான எல்லைக் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளதாக ஜேர்மனி அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது முறையற்ற இடம்பெயர்வைக் கட்டுப்படுத்துவதையும், குற்றவாளிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதையும், நோக்கமாகக் கொண்டுள்ளது என ஜேர்மனியின் உள்விவகார அமைச்சர் நான்சி ஃபேசர் தெரிவித்துள்ளார். இந்த தீர்மானத்திற்கு, ஏனைய ஐரோப்பிய நாடுகள் தமது கண்டனத்தை வெளிப்படுத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  

பிரித்தானியாவில் பரவும் புதிய வகையான வைரஸ்…!

பிரித்தானியாவில் கால்நடைகளை பாதிக்கும் புதிய வகையான 'ப்ளூடங்' (Bluetongue) என அழைக்கப்படும் வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. குறித்த வைரஸ் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது அல்ல எனினும், மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.. பிரித்தானியாவின் நார்ஃபோல்க் (Norfolk) பகுதியில் உள்ள ஹாட்டிஸ்கோ (Haddiscoe) என்ற இடத்தில் ஒரு ஆடு இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தற்போது...

ஜேர்மனில் கத்திக் குத்து தாக்குதல் மூவர் பலி..!

மேற்கு ஜேர்மனியின் சோலிங்கன் (Solingen) நகரில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர் மற்றும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். அந்நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் நகர மையத்தில் நடைபெற்ற ஒரு விழாவின்போது, இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத ஒரு நபர் பல நபர்களைத் தாக்கினார், மேலும் குற்றவாளி...

பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனின் உறுதியான முடிவு!!!

பலஸ்தீனத்தை தனி அரசாக அங்கீகரிப்பதில் பிரான்ஸ்க்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. தகுந்த நேரத்தில் இதனை செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார். ஜேர்மனியில் சான்சிலர் ஒலாப் சோல்ஸ் சகிதம் செய்தியாளர் மாநாட்டில் காசா குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மற்றும் அயர்லாந்து, நோர்வே, ஸ்பெயின் ஆகிய நாடுகள் பலஸ்தீனத்தை...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img