இந்நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவிக்கிறது.
இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 88,000ஐ நெருங்கியுள்ளது.
அதன்படி நேற்று (05) வரை இந்நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து 88,088 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிட்டது.
இந்த மாதம் கடந்த காலப்பகுதியில் மாத்திரம் டெங்கு நோயாளர்கள் 2,739 பேர் பதிவாகியுள்ளனர்.
டெங்கு நோயாளர்கள் அதிகளவில் கம்பஹா மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளனர், அது சதவீத ரீதியாக 21.27% ஆகும்.
இதற்கிடையில், கொழும்பு மாவட்டத்திலிருந்து 17,490 பேரும், கண்டியிலிருந்து 6,195 பேரும், மாத்தறையிலிருந்து 5,910 பேரும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 5,753 பேரும் பதிவாகியுள்ளனர்.







