இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ‘ஓம்’ திரைப்படம் நவம்பர் 20 (நேற்று) திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நசீருதீன் ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் முதல் நாளில் இந்தியாவில் ரூ.17.70 கோடி நிகர வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் மொத்தமாக ரூ.20.55 கோடி வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் ரூ.11 கோடி வசூல் செய்ததன் மூலம் உலகளவில் மொத்தம் ரூ.31.55 கோடியை ஈட்டியுள்ளது. தமிழில் வெளியான பதிப்பு அதிக வசூலைப் பெற்றுள்ளது. முதல் நாளில் தமிழில் ரூ.13.35 கோடியும், தெலுங்கில் ரூ.4 கோடியும், இந்தியில் ரூ.35 லட்சமும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் தனுஷ் நடித்த தேரே இஷ்க் மெய்ன் படமே முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக பதிவாகியுள்ளது என கூறப்படுகிறது.








