வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த 70-க்கும் மேற்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட தேசிய நடவடிக்கை வெற்றி பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்ததுடன், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) ஆற்றி வரும் முக்கிய பங்கையும் சுட்டிக்காட்டினார்.
களுத்துறை, கட்டுக்குருந்தவில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை STF பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்ற 83 ஆவது பயிற்சிப் பிரிவின் பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொண்ட போது அமைச்சர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.








