தமிழ் பேசும் 6 அரசியல் கட்சிகள் பொதுவான விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான உடன்பாட்டை நாளை (திங்கட்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவிக்கவுள்ளன.
தற்போதைய கட்டத்தில் பொதுவான நலன்கள் தொடர்பான விடயங்களில் ஒத்துழைத்து செயற்படுவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக குறித்த கட்சிகள் தெரிவித்துள்ளன.
மேலும் விபரங்கள் நிகழ்வின் போது வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த உடன்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்,ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி,இலங்கை தமிழரசு கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன.








