தரச்சான்றிதழின்றி குருணாகல் பகுதியில் இயங்கி வந்த டின் மீன் தொழிற்சாலை ஒன்று நுகர்வோர் அதிகார சபையால் முத்திரையிடப்பட்டு பூட்டப்பட்டுள்ளது.
குறித்த தொழிற்சாலையின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதவிர குறித்த தொழிற்சாலையிலிருந்து சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள டின் மீன்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது.








